சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட இவர், சரோஜா, மங்காத்தா, கோவா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு மற்றும் மன்மத லீலை ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
24
இதையடுத்து நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. அப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நடிகர் நாகசைதன்யாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்திற்கு கஸ்டடி என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் நடிகர் நாக சைதன்யாவை போலீஸ் கஸ்டடியில் பிடித்து வைத்திருப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது இந்த போஸ்டரின் மூலம் தெரியவந்துள்ளது.
44
கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, சம்பத் குமார், சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் மாமனிதன் படத்திற்கு இணைந்து இசையமைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.