கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகைகள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்களில் நடிகை நயன்தாரா, திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார்.
25
ஆனால் நடிகை திரிஷாவுக்கு வயது 40-ஐ நெருங்கி வரும் நிலையிலும் அவர் திருமணம் செய்துகொள்ள முனைப்பு காட்டவே இல்லை. தற்போது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி வருகிறார் திரிஷா. அடுத்தடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், நடிகைகள் குறித்து பல்வேறு அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
45
அதன்படி நடிகை திரிஷாவும் சமந்தாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருவதாகவும், இதில் நடிகை சமந்தாவுக்கு கடந்த ஆண்டு விவாகரத்து ஆனதால், தனக்கும் திருமணத்திற்கு பின்னர் இதுபோல் நடந்துவிடுமோ என்கிற பயத்தில் திரிஷா திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டி வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.
55
அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப்போக முக்கியமான காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்ததாக அவரது வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஒரு வேளை திருமணம் செய்துகொண்டால் இதுபோல் சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷா திருமணத்திற்கு நோ சொல்வதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.