தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்தை... நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தாக தற்போது சிவகார்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் மேட்சிங்... மேட்சிங் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் குறித்து... வெளியில் கூறியது இல்லை என்றாலும், திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் அவருடைய வள்ளல் குணம் மற்றும் அவர் தன்னிடம் வேலைசெய்பவர்களுக்கு கூட எந்த அளவுக்கு மரியாதையை கொடுப்பார், அவர்கள் மீது அன்பு செலுத்துவார் என்பது நன்றாகவே தெரியும்.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரஜிகாந்த்தின் ஜெயிலர் படப்பிடிப்புக்கு திடீர் என விசிட் அடித்து... ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ் குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து... தற்போது அஜித்துடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.