இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள் 'தளபதி 67' படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை பல கோடிக்கு தட்டி தூக்கிய நிறுவனம்!

Published : Nov 16, 2022, 08:24 PM IST

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில், இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள் 'தளபதி 67' படத்தின் ஸ்ட்ரீமிங் ரைட்ஸை பல கோடிக்கு தட்டி தூக்கிய நிறுவனம்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.  இந்த படத்தை தொடர்ந்து, விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67 வது படத்தில் நடிக்க உள்ளார். 

25

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்... இரண்டாவது முறையாக விஜய் தன்னுடைய 67 வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? நடிகர் சாய் தீனா கூறிய பரபரப்பு விளக்கம்.!
 

35

கேங்ஸ்டர் கதையம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய்க்கு நிகராக நான்கு அல்லது 5 வில்லன்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,  நடிகர் விஷால், கெளதம் மேனன், மிஷ்கின், மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் பெயர் அடிபட்டது.

45

ஆனால் நடிகர் மிஷ்கின் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தில் நடிக்க உள்ளதாலும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மகாலட்சுமி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்
 

55

தளபதி 67 படம் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், இந்தப் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் ஓடிடி ஸ்டீனிங் ரைட்ஸை பிரபல நெட்பிக்ஸ் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு, இப்படத்தை வாங்க காரணம்... விக்ரம் கொடுத்த வெற்றி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொழிலதிபருடன் நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்? பரபரக்கும் கல்யாண வேலை.. தீயாக பரவும் தகவல்!
 

Read more Photos on
click me!

Recommended Stories