நடிகை தமன்னா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்... இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து முன்னணி நடிகையாக உயர்த்தியது தென்னிந்திய சினிமா தான். தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், எப்போது திருமணம் செய்து கொள்வார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தமன்னா மும்பையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள, ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவலை தமன்னா வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tammanna
பாகுபலி நடிகை தமன்னாவின் திருமணம் குறித்து, ஏற்கனவே பல வதந்திகள் எழுந்துள்ள நிலையில், தற்போது பரவி வரும் இந்த தகவலும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை தமன்னா தரப்பை சேர்ந்தவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.