நடிகை கீர்த்தி சுரேஷ்... மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் என்பதால் இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு எளிதாக கிடைத்தது.
இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு, தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பின்னர் முழுமையாக திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து விலகி, குடும்பம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.
மேனகா - சுரேஷ் தம்பதியின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் - தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்