ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரின் ஸ்டைல் தான். ஆரம்பகால கட்டத்தில் கர்நாடகாவில் பஸ் கண்டெக்டராக பணியாற்றி வந்த ரஜினிகாந்த், படித்தது வெறும் பத்தாம் வகுப்பு தான். அதன்பின் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பிலிம் இன்ஸ்டீடியூட்டில் படித்து பின்னர் சினிமாவில் களம்கண்ட ரஜினிகாந்த், இன்று சூப்பர்ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.
கமல்ஹாசன்
சினிமாவில் புது புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் கமல்ஹாசன் கில்லாடி என்பது நமக்கு தெரியும். ஆனால் இவர் படித்ததோ 10-ம் வகுப்பு தான். சிறு வயதில் இருந்து நடித்து வரும் கமல்ஹாசன், இன்று திறமையான இயக்குனராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு அவரது திறமையே காரணம்.
இதையும் படியுங்கள்... காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த்
விஜய்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய், பள்ளிப்படிப்பை முடித்ததும், தனது தந்தையிடம் சினிமாவில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ படிப்பு தான் முக்கியம் என லயோலா கல்லூரியில் சேர்த்துவிட, கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இன்று நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.
அஜித்குமார்
நடிகர் அஜித், இன்று நடிப்பைத் தாண்டி கார், பைக் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் குறித்த பயிற்சியும் இவர் அளித்துள்ளார். இப்படி கல்லூரி மாணவர்களுக்கு பாடமெடுக்கும் அளவுக்கு திறமை மிகுந்த நடிகராக இருக்கும் அஜித் படித்தது வெறும் 10-ம் வகுப்பு தான். அதன்பின் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த அஜித், பின்னர் சினிமாவில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.