Published : Feb 26, 2025, 02:09 PM ISTUpdated : Feb 26, 2025, 05:26 PM IST
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அரசியல்வாதி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளதால், இவர் இன்பநிதிக்கு போட்டியாக வருங்காலத்தில் அரசியல் செய்வாரா? என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட துவங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழா:
தளபதி விஜய் கடந்த 2023-ஆம் ஆண்டு துவங்கிய, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழாவில் இன்று மிகவும் பிரமாண்டமாக நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தவெக ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
26
3000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி:
இதில் 3,000 முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள் மட்டும்தான் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அனுமதி மறுக்க, நிகழ்ச்சி நடக்கும் தனியார் விடுதிக்கு வெளியே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் தேர்தல் வியூக அமைப்பாளராக பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு விஜய் சந்திக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தான் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் ஒரு பக்கம் தன்னுடைய அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் அரசியல் பிரபலம் வீட்டு திருமணத்திற்கு விசிட் அடித்துள்ளது, இவரும் வருங்கால அரசியல் வாரிசா? என்று கமெண்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
46
கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சி
தளபதி மகன் சஞ்சய், நேற்றைய தினம் பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து கொள்ளவில்லை என்றும், லைகா நிறுவனத்தின் கீழ் இவர் புதிதாக ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் அதிகாரி தமிழ் குமரன் அழைப்பின் பெயரில் தான் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
56
அரசியலில் என்ட்ரி கொடுப்பாரா?
எனினும் திமுக, கட்சி வாரிசு அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், உதயநிதிக்கு பின்னர் அவருடைய மகன் இன்ப நிதியும் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது. எனவே இந்த லிஸ்டில் ஜேசன் சஞ்சய்யும் அப்பாவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை கையில் எடுப்பாரா? என்பது பற்றி பொறுத்திருந்து பார்போம்.
ஜேசன் சஞ்சய் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் ஜேசன் சஞ்சய்யை பார்த்து ரசிகர்கள் பலர் அப்படியே தளபதி விஜய் போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.