2020- ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி எழுதி - இயக்கி இருந்த திரையாடம் திரௌபதி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரௌபதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் கிரவுட் ஃபண்ட் மூலமாக இயக்கி - தயாரித்திருந்த திரைப்படம் திரௌபதி. இந்தப் படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். மேலும் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கருணாஸ், நிஷாந்த், கே எஸ் ஜி வெங்கடேஷ், சௌந்தர்யா, லீனா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
25
போலி திருமணங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது:
மேலும் இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வட சென்னையில் உள்ள, சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த போலி திருமணங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பெண்களை ஏமாற்றும் நாடகக் காதலை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
35
14 கோடி வசூல்:
அதே நேரம் குறிப்பிட்ட சமூகத்தை இந்த திரைப்படம் தவறாக சித்தரித்து எடுப்பதாக எடுத்திருப்பதாக சில விமர்சனங்களும் வெளியாகின. 50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், இன்னொரு புறம் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்றது. முதல் நாளிலேயே இரண்டு கோடி வசூல் செய்த இந்த திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 14 கோடி வசூல் சாதனை செய்தது.
45
ருத்ர தாண்டவம் & பகாசுரன்
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து மோகன் ஜி தன்னுடைய அடுத்த படத்திற்காக மீண்டும் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைத்தார். ருத்ர தாண்டவம் என்கிற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படமும் சமூக பிரச்னையை தோலுரித்து காட்டியது. இதன் பின்னர் செல்வராகவனை வைத்து, பகாசுரன் படத்தை இயக்கினார். 2022 ஆம் ஆண்டு இவன் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
55
திரௌபதி 2
இதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, மோகன் ஜி இயக்க உள்ள, திரௌபதி 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த போஸ்டரையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 14-ஆவது செஞ்சுரி கதைக்களத்தை மையமாக வைத்து, இந்த படத்தை புதிய கண்ணோட்டத்திலும், கதைக்களத்திலும் இயக்குனர் மோகன் ஜி இயக்க உள்ளதாக போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.