
Jyothika Talk about gender discrimination : தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியும் ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, காக்க காக்க, உயிரிலே கலந்தது, பேரழகன், ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இதில் 1999ஆம் ஆண்டு திரைக்கு வந்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படம் மூலமாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து 7 ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட ஜோதிகா அதன் பிறகு தியா மற்றும் தேவ் பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். ரீ எண்ட்ரிக்கு பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதில், மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என்று வரிசையாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார்.
தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கதைகளில் நடித்து தனக்கு போர் அடித்துவிட்டது என்று கூறிய ஜோதிகா தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகியுள்ளார். சூர்யா தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தவே, ஜோதிகா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். Shaitaan, Srikanth ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். தற்போது Dabba Cartel என்ற பாலிவுட் வெப் சீரிஸீல் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு எதிர்கொண்ட பாலியல் பாகுபாடு குறித்து பேசியிருக்கிறார்.
இது ஒரு சாதாரண விஷயம் தான். என்னதான் நான் ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் நானும் பாலியல் பாகுபாடு எதிர்கொண்டேன். சூர்யாவை திருமணம் செய்து கொண்டது நான் செய்த அதிர்ஷ்டம் என்று கூறினால், எல்லோருமே சூர்யா ரொம்ப நல்லவர் என்கிறார்கள். இதே போன்று என்னை திருமணம் செய்து கொண்ட அவர் செய்த அதிர்ஷ்டம் என்று அவர் சொன்னால், திடீரென்று சூர்யா நல்லவர் மாதிரி, மனைவி பற்றி யோசிச்சுக்கிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.
இது என்னுடைய திருமண வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒரு சாதாரண விஷயத்திலும் கூட நடக்கிறது. ஒரு கார் வாங்கினால், அந்த கார் சாவியை பெற்று உள்ளே இருக்கும் அம்சத்தை சரிபார்க்க வேண்டும். இது அன்றாடம் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியாக இப்போது மாறிவிட்டது. இதுதவிர தனது தொழில் வாழ்க்கை பற்றியும் அவர் பேசியுள்ளார். ஒரு பெண்ணாக எனது முடிவுகளை இப்போதுநான் தான் எடுக்கிறேன். சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஒரு சில சிறந்த படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறேன். பாலிவுட் நடித்ததால் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.