ஜீ தமிழ் 'கார்த்திகை தீபம்' சீரியலில் தற்போது ரேவதியின் திருமண வைபோகம் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
கார்த்திகை தீபம் தொடரின், நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை மாப்பிள்ளை தோழனாக மகேஷ் பக்கத்தில் அமர வைக்கிறார். அவன் ஒரு ட்ரைவர் என எழுந்த விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கார்த்திக் என்னுடைய தம்பி மாதிரி என பாசத்தோடு பேசிய காட்சிகள் இடம்பெற்றன.
25
மணமகள் தோழியாகும் ரோகினி:
இதை தொடர்ந்து, இன்றைய எபிசோடில், ரேவதிக்கு மணமகள் தோழியாக ரோஹிணியை அமர வைக்க சாமுண்டீஸ்வரி சொல்கிறார். ஆனால் ரோகிணி, இதற்க்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் சாமுண்டீஸ்வரி ஏன் இப்படி சொல்ற, உனக்கு இதுல விருப்பம் இல்லையா? என்று கேட்க.. எனக்கு குழந்தை இல்லை. நான் புது பெண்ணுடன் வந்தால் அதை அபசகுனம் என சிலர் சொல்வார்கள் என கூற, அதெல்லாம் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல நீ உட்கரு என சொல்கிறாள்.
ரோகிணி மீண்டும் எதையோ யோசித்தபடி இருக்க, ரேவதி நீ வரலைனா நான் காரை விட்டு இறங்கிடுவேன் என்று சொல்கிறாள். பின்னர் ரோகினியம் ஒருவழியாக மணப்பெண் தோழியாக சம்மதிக்கிறாள்.
45
கார்த்திக்கும் ரேவதிக்கும் எடுக்கப்படும் ஆரத்தி:
மணப்பெண்ணான ரேவதி, திருமண மண்டபத்துக்கு வந்ததும், அவர்களுக்கு ஆரத்தி எடுக்க சொல்கிறார்கள். இதற்காக ஒரு பெண் செல்ல, ரேவதி பக்கத்தில் நிற்கும் மகேஷை மயில்வாகனம் பிடித்து தன்பக்கம் இழுக்க, மாப்பிள்ளை தோழனாக வந்த, கார்த்திக்கும் - ரேவதிக்கும் ஆரத்தி எடுப்பது போல் ஆகிறது. இந்த சம்பவத்தை பார்த்து மகேஷ் மற்றும் மாயா இருவரும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைகிறார்கள்.
அதே நேரம் மாயா - மகேஷ், சந்திரகலாவுக்கு மனதில் சந்தேகம் எழுந்தாலும் அதை அவர்கள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏற்கனவே, சாமுண்டீஸ்வரி இந்த கல்யாணம் நடக்கும் ஆனால் மகேஷ் மாப்பிள்ளை இல்லை என டாக்டர் மல்லிகாவிடம் கூறிய நிலையில், அவரின் புது பிளான் என்ன... இந்த கல்யாணத்தில் என்னென்ன ட்விஸ்ட் நடக்க உள்ளது என்பது பற்றி அறிய கார்த்திகை தீபம் தொடரை பாருங்கள்.