சமீப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக, சின்னத்திரை நடிகைகள் பற்றிய தகவல்களும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வரும் ரேணுகா என்பவர், கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
25
மைசூரில் இருந்து சென்னை வந்த நடிகைக்கு நடந்த சம்பவம்
ரேணுகா மைசூரில் இருந்து சென்னைக்கு, காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடத்துள்ளது. ]இந்த ரயில் ஆவடி அருகே வந்தபோது, நடிகை ரேணுகா கை பையில் சில நகைகள் வைத்திருப்பதை நோட்டமிட்டுள்ளார் நபர், எப்படியும் அந்த கைப்பையை அவரிடம் இருந்து பறிக்க முடிவு செய்துள்ளார்.
35
நகை இருந்த கை பையை திருடிக்கொண்டு ஓடிய போலீஸ்:
நாசுக்காக ரேணுகா நகைகளை வைத்திருந்த பையை திருடிக் கொண்டு, செல்லும்போது நடிகையின் கண்ணில் சிக்கி உள்ளார். இதை கவனித்த நடிகை சத்தம் போட்டபடி அந்த பையை தன்னிடம் கொடுக்கும்படி கேட்ட நிலையில், அந்த நபர் நகைகள் இருந்த கைப்பையை தூக்கி வெளியே வீசி உள்ளார். அந்த ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அந்த நபர் தப்பிக்காத வண்ணம் அவரை பிடித்த நிலையில், நடிகை உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு, அபாய சக்கலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார்.
45
திருட்டு போன கை பை
பின்னர் ரயில்வே அதிகாரிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்த காரணத்தை கேட்ட போது, தன்னுடைய நகை வைத்திருந்த கைப்பையை இந்த நபர் திருடி விட்டதாக கூறி அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்ததோடு கீழே இறங்கி சென்று, நகைகள் இருந்த பையையும் எடுத்து வந்துள்ளார்.
55
கைவரிசை காட்டிய போலீஸ்
பின்னரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வாலாஜாவை வசந்தகுமார் என்பது தெரியவந்ததும். இவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.