ரத்னா விஷயத்தில் சண்முகம் போட்ட சபதம்; தப்பிக்க வெங்கடேஷ் செய்த தில்லு முல்லு - அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Feb 26, 2025, 11:39 AM IST

'அண்ணா' சீரியல் தற்போது பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய தினம் தன்னுடைய தங்கைக்காக சண்முகம் எடுத்த சபதமும், வெங்கடேஷ் செய்யும் தில்லுமுல்லும் தான் ஹை லைட்.  

PREV
15
ரத்னா விஷயத்தில் சண்முகம் போட்ட சபதம்; தப்பிக்க வெங்கடேஷ் செய்த தில்லு முல்லு - அண்ணா சீரியல் அப்டேட்!
டீயில் கலக்கப்பட்ட மயக்க மருந்து

நேற்றைய தினம், சௌந்தரபாண்டி பேச்சை கேட்டுக்கொண்டு, சண்முகம் குடும்பத்தையும், ரத்னாவையும் அசிங்கப்படுத்தும் விதத்தில், வெங்கடேஷ் காசுகொடுத்து டீயில் மயக்க மருந்து கலந்து கொடுக்க சொன்ன நிலையில், அந்த டீயை குடித்த பின்னர் அறிவழகன் மற்றும் ரத்னா இருவரும் ஹெட் மாஸ்டர் அறையில் மயக்கம் போட்டு சேரில் அமர்ந்தபடியே தூங்கி விடுகிறார்கள்.

25
ஊர்மக்கள் முன்பு ஆசைங்கப்பட்ட ரத்னா

சௌந்தரபாண்டியும் ரத்னாவை அவமானம் படுத்தும் நோக்கத்தில் ஊர் மக்களை அழைத்து வந்து ஹெட் மாஸ்டர் அறையை திறந்த நிலையில், இன்று என்ன நடக்க போகிறது? என்பதை பார்ப்போம். ரத்னா மற்றும் அறிவழகன் இருவரும் மயக்கம் தெளிந்து ஒரே நேரத்தில் வெளியே வர, ரத்னாவை அந்த ஊர் மக்கள் தப்பாக பேசுகின்றனர். அறிவழகனையும் அடித்து கொடி மரத்தில் கட்டி வைத்து அசிங்கப்படுத்துகிறார்கள்.

Anna Serial : அசிங்கப்பட்டு நிற்கும் ரத்னா! அதிர்ச்சியின் உச்சத்தில் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

35
பிரச்னையை பெருசாக்கும் சௌந்தரபாண்டி

ஆனால் ஷண்முகம் என் தங்கச்சி எந்த தப்பு பண்ணி இருக்க மாட்டா என்று சொல்கிறான்.  சௌந்தரபாண்டி இது தான் பழிவாங்க நல்ல சமயம் என்பதால், ஊர் மக்கள் எல்லாரும் அப்போ கண்ணால பார்த்தது பொய்யா என கேட்க, ஒருவன் ரத்னா-வை அசிங்கமாக பேச, அவனை சண்முகம் அங்கேயே அடிக்கிறான். சௌந்தர பாண்டி இந்த பிரச்னையை ஊதி பெருசாக்கும் விதமாக எங்க புள்ளைங்க ஒழுக்கமா இருக்கனும்னு தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். டீச்சரே இப்படி இருந்தா எப்படி என ஸ்கூலை இழுத்து மூட சொல்கிறார். 

45
சபதம் போட்ட சண்முகம்

சண்முகன் என் தங்கச்சி உத்தமினு இந்த ஊர் முன்னாடியும், மக்கள் முன்னாடியும் நிரூபிப்பேன். அப்படி இல்லனா என் பெயர் ஷண்முகம் இல்லை என சவால் விடுகிறார். அதே போல் உண்மையை நிரூபித்து திரும்பவும் ஸ்கூலை திறந்து அவளை ப்ரின்ஸிபலா உட்கார வைப்பேன் என்கிறான்.  ரத்னா நடு வீட்டில் உட்கார்ந்து என் மேல் இப்படி ஒரு பழி வந்துவிட்டதே என கண் கலங்கி அழ, அவளுக்கு திடீர் என அந்த டீ குடித்த பின்னரே இப்படி நடந்தது நினைவுக்கு வருகிறது.

ரத்னாவை அசிங்கப்படுத்த நடக்கும் சதி - ஷண்முகம் இதை தாங்குவாரா? அண்ணா சீரியல் அப்டேட்!

55
சண்முகத்துடன் கை கோர்த்த முத்துப்பாண்டி

இதை அண்ணன் சமூகத்திடம் ரத்னா கூற, அப்போ எனக்கு என்னமோ டீ கொண்டு வந்து கொடுத்தவன் மேலே தான் சந்தேகமா இருக்கு என்று சொல்லி, முத்துபாண்டியும், சண்முகமும் அவனை விசாரிக்க கிளம்பி செல்கின்றனர்.  டீ கடைக்காரனிடம் இதுகுறித்த விசாரிக்க, ரத்னாவுக்கு டீ கொடுத்தது பீகாரை இருந்த பையன் எனவும்  அவன் ரூமில் இருப்பதும் தெரியவருகிறது.

இருவரும் ரூமுக்கு செல்வதற்கு முன்பு, வெங்கடேஷ் இதுகுறித்து அந்த டீ கொடுத்த இளைஞருக்கு போன் மூலம் தகவல் கொடுக்க அவர் அந்த ரூமில் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இதனால் சமூகம் மற்றும் முத்துப்பாண்டி ஏமாற்றம் அடையும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி அறிய தொடர்ந்து அண்ணா சீரியலை பாருங்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories