நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.