யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published : Dec 10, 2022, 11:01 AM ISTUpdated : Dec 10, 2022, 11:10 AM IST

யோகிபாபுவின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.

PREV
15
யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு தமிழில் ரிலீசாகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் யோகிபாபுவின் பங்களிப்பு இருந்து வருகிறது. இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாக நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

25

அந்த வகையில் இவர் கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான மண்டேலா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சலூன் கடை நடத்தி வருபவராக நடித்திருந்தார் யோகிபாபு. இப்படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தது. 

இதையும் படியுங்கள்... மண்டோஸ் புயலால் வலுவிழந்த வைகைபுயல்! பாக்ஸ்ஆபிஸில் டல்லடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்- முதல்நாள் வசூல் இவ்ளோதானா?

35

இதையடுத்து பொம்மை நாயகி மற்றும் மலை ஆகிய படங்களிலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு. இதில் பொம்மை நாயகி படத்தை பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். அதேபோல் மலை படத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் நடித்து வருகிறார். இதுதவிர துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத்தும் யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

45

இவ்வாறு பிசியாக நடித்து வரும் யோகிபாபு, கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.

55

அந்த பேட்டை கையில் பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து விஜய் நன்றி தெரிவித்துள்ளார் யோகிபாபு. இந்நிலையில், அந்த பேட்டில் விலையையும் தேடி பிடித்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி அந்த பேட்டின் விலை ரூ.10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மாண்டஸ் புயலுக்கு மத்தியிலும் மாஸ் காட்டும் ரஜினி... பாபா ரீ-ரிலீஸை வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories