மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைபுயல்! பாக்ஸ்ஆபிஸில் டல்லடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்- முதல்நாள் வசூல் இவ்ளோதானா?

First Published Dec 10, 2022, 10:06 AM IST

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு, இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் அவர் மீது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதன்காரணமாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த ரெட் கார்டு பிரச்சனை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய வடிவேலு, முதன்முதலில் கமிட் ஆன படம் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்ததால், அதையே படத்துக்கு தலைப்பாக வைக்க முயற்சித்தனர். ஆனால் அதே தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு படத்தை எடுத்ததால் வடிவேலு படத்துக்கு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என பெயரிட்டனர்.

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருந்தது. சுராஜ் இயக்கிய இப்படத்தில் வடிவேலு உடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், ஆனந்தராஜ் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... மாண்டஸ் புயலுக்கு மத்தியிலும் மாஸ் காட்டும் ரஜினி... பாபா ரீ-ரிலீஸை வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. படம் முழுக்க வடிவேலு இருந்தாலும், காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது தான் இப்படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. வடிவேலு கம்பேக் கொடுப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.1 முதல் ரூ.1.5 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் நடித்த படம் பாக்ஸ் ஆபிஸில் இந்த அளவுக்கு சுமாரான வசூலை குவித்ததற்கு காரணம் மண்டோஸ் புயல் தான். நேற்று மண்டோஸ் புயல் அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக இப்படத்திற்கு குறைந்த அளவிலான கூட்டமே வந்துள்ளது. இதனால் தான் படத்தில் வசூலும் டல் அடித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாளாக இருப்பதால், இப்படத்தின் வசூல் அதிகரிக்குமா அல்லது இதேபோல் டல் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் தந்த மவுசு... தனுஷுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன படக்குழு

click me!