நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட், டோலிவுட் என பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி உள்ளது. ராக்கி, சாணிக் காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் கேப்டன் மில்லர் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.