ஜெய்யுடன் லிவிங்-டூ கெதர் வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாழானதா? அஞ்சலி ஓப்பன் டாக்..!

Published : Dec 09, 2022, 10:51 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி, நடிகர் ஜெய் காதலித்து வந்ததாகவும், அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இது குறித்த உண்மை என்ன என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.  

PREV
17
ஜெய்யுடன் லிவிங்-டூ கெதர் வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாழானதா? அஞ்சலி ஓப்பன் டாக்..!

தெலுங்கு திரையுலகின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் அஞ்சலி. இதைத்தொடர்ந்து தமிழில் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். இவரது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால், ரசிகர்கள் மனதை கவர்ந்த அஞ்சலி.. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் தட்டிச் சென்றார்.
 

27

இதைத் தொடர்ந்து, கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வந்த அஞ்சலி நடிப்பில் வெளியான, 'அங்காடி தெரு' திரைப்படம் இவருடைய வேறுவிதமான நடிப்பை வெளியப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்ரவதி சவுகான்!

 

37

இதன் பின்னர் அஞ்சலி நடிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி', 'தம்பி வெட்டேந்தி சுந்தரம்', 'கலகலப்பு', 'வத்திக்குச்சி' போன்ற திரைப்படங்கள் இவரது ஹிட் லிஸ்டில் இணைந்து, இவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.

 

47

அதிக கவர்ச்சியை காட்டாமல் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய அஞ்சலி, நடிகர் ஜெய்யுடன் 'பலூன்' படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் கொழுந்து விட்டு எரிவதாகவும், இருவரும் லிவிங் - டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இருவரும் சில இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தது மட்டும் இன்றி, சூர்யா - ஜோதிகாவின் தோசை சேலஞ்சில் கூட ஒன்றாக சேர்ந்து செய்து அசத்தினர்.

2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடங்கள்..!
 

57

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்பட்டது. ஜெய் மீது கொண்ட காதலால் பல பட வாய்ப்புகளை அஞ்சலி தவிர்த்து வந்ததால், அவரது திரையுலக வாழ்க்கை பாழாகி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்படி வெளியான தகவலுக்கு அஞ்சலி தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அஞ்சலி பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு இறங்கிவிட்டார்.

 

67

இந்நிலையில் அஞ்சலி வெப் சீரிஸ் பக்கம் சாய்த்துள்ள நிலையில், இவர் நடித்துள்ள FALL வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. இது குறித்த புரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி முதல் முறையாக ஜெய் மீதான காதல் மற்றும் அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்பட்ட தகவல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ப்பா... கண்ணாடி முன் அமர்ந்து... கவர்ச்சி உடையில் கால் அழகை காட்டிய குட்டி நயன் அனிகா! வைரலாகும் போட்டோஸ்!
 

77

நான் காதலிக்கிறேன் என்று யாரிடமும் கூறியதில்லை. சினிமாவில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர் அதனால் பலர் அப்படி எழுதுவதும் உண்டு, ஆனால் இதைப் பற்றி நான் பேசியதும் இல்லை. இப்படி பட்ட தகவல்கள் குறித்து பேச விருப்பமும் இல்லை. ஒரு விஷயத்தை நான் செய்தால் தானே கவலைப்பட வேண்டும்? என தனக்கும் ஜெயிக்கும் காதல் என்கிற ஒரு உறவு இல்லவே இல்லை என்பது போல் பேசியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories