நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷ் பாய் கட்டிங் ஹேர் ஸ்டைல் செய்தால் எப்படி இருப்பர் என்பதை இந்த புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது.
AI தொழில்நுட்பம் மூலம், நடிகர் - நடிகைகளின் தோற்றத்தை முழுமையாக மாற்றி... இதுகுறித்த சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் உலாவவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்தவகையில், தற்போது கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம், படு வைரலாகி வருகிறது.
25
Keerthy Suresh New Hair Style:
இப்படி ஒரு ஹார் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா?
இது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை அறியாத ரசிகர்கள் சிலர், கோடை காலம் துவங்கி விட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு ஹார் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே நேரம், இந்த ஹேர் ஸ்டைல் கீர்த்தி சுரேஷின் அழகை எந்த விதத்திலும் குறைத்து காட்ட வில்லை என்பதும் அவர்களின் கருத்து.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் திருமண வாழ்க்கையில் இணைந்தார் என்பதால்... உங்களுடைய இந்த புதுமையான ஹேர் ஸ்டைலுக்கு எங்கள் மாமியார் என்ன சொன்னார் என்று சிலர் கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
45
Keerthy Suresh Next Movie
பாலிவுட் திரைப்படம்:
இதுகுறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர், எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக... பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தவிர அக்கா என்கிற வெப் தொடரில் மிகவும் போல்டான வேடத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகி உள்ளது. தமிழிலும் கீர்த்தி சுரேஷ் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.