'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published : Apr 05, 2025, 12:31 PM ISTUpdated : Apr 05, 2025, 12:42 PM IST

'எல்2 எம்புரான்' பட இயக்குனரும் , நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் கேரள திரையலாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.  

PREV
14
'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

4 நாட்களில் சுமார் 200 கோடி வசூல்:

 'எல்2 எம்புரான்' திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 27-ஆம் தேதி வெளியானது. பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம், 4 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியது. அதே போல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. 

24

எம்புரான் படத்தின் 24 காட்சிகள் நீக்கம்:

இதற்கிடையில், எம்புரான் படத்தின்... சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன் லால் மன்னிப்பு கோரியது மட்டும் இன்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதை தொடர்ந்து, 24 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு மறு தணிகை செய்யப்பட்டது. இந்த புதிய பதிப்பு நேற்று முன்தினம் முதல்  திரையரங்குகளில் வெளியானது. படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்கிய பின்னர், தற்போது வசூல் ரீதியாகவும் எம்புரான் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

34

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை:

இந்நிலையில், நேற்றைய தினம், "எம்புரான் படத்தை தயாரித்த தயாரித்த கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய தினம் நடிகர் மற்றும் பிருத்விராஜிக்கு வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

 

44

வருமான வரித்துறை நோட்டீஸ்:

அதாவது "நடிகர் பிருத்விராஜின் சம்பளம் குறித்து விளக்கம் அளிக்க வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர் முன்பு நடித்த படங்களுக்கான ஊதியம் குறித்து விளக்கம் பெறப்பட்டது. அதே போல் எம்புரான் படத்தை இயக்கியதோடு இணை தயாரிப்பாளராக ரூபாய்.40 கோடி பணம் பெற்றுள்ளதாகவும் (Rs. 40 crore salary) இதற்கான கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும் என தற்போது வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ( IT notice to 'Empuran' director Prithviraj) . இந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories