அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கோன் பனேகா க்ரோர்பதி' சீசன் 17 ஆரம்பம்!

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ள, 'கோன் பனேகா க்ரோர்பதி 17' பதிவு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் கலந்து கொள்ள பலர் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 

ஹிந்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'கோன் பனேகா க்ரோர்பதி' இதன் 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்களின் தங்களின் திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள்.
 

கேபிசி 17 ஜூலை அல்லது ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்பார்ப்பு

கோன் பனேகா க்ரோர்பதி 17 ஜூலை அல்லது ஆகஸ்ட் 2025 இல் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகார பூர்வமாக நிகழ்ச்சி துவங்கும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 


கேபிசி 17க்கு எப்படி பதிவு செய்வது

கோன் பனேகா க்ரோர்பதி 17க்கு ஏப்ரல் 14, 2025 முதல் பார்வையாளர்கள் பதிவு செய்யலாம். முதல் கேள்வி இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும். சோனி லிவ் ஆப் அல்லது வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம்.

கேபிசி 17ல் என்ன எதிர்பார்க்கலாம்

கோன் பனேகா க்ரோர்பதி 17 புதிய மாற்றங்கள் மற்றும் அற்புதமான புதிய அம்சங்களுடன் வர உள்ளதாம் . அமிதாப் பச்சன் தொகுப்பாளராக திரும்புகிறார். ரசிகர்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு, பெரிய தொகையை சம்பாதிக்கவும் தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!