Published : Apr 05, 2025, 09:05 AM ISTUpdated : Apr 05, 2025, 09:23 AM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் சீரியல் நடிகரின் மனைவி கண்ணீருடன்... அவர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சன் டிவியில் அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் தான் 'கயல்'. இந்த தொடரை பி.செல்வம் என்பவர் இயக்க, சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும், இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக்கும் நடித்து வருகிறார்கள்.
25
Kayal Seiral Cast
கயல் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள்
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மீனா குமாரி, வழக்கு எண் முத்து ராமன், சுமங்கலி, உமா ரியாஸ் கான், ஐயப்பன், ஜீவா ராஜேந்திரா, அபி நவ்யா, சுபா கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். TRP ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 3 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடர், முழுக்க முழுக்க குடும்ப கதை களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் ஹீரோயின் கயலுடைய அண்ணன், மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஐயப்பன். பொறுப்பில்லாம்.. குடும்பத்தை கவனிக்காமல் குடித்து விட்டு சுற்றி கொண்டிருப்பது போல், ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட இவரின் கதாபாத்திரம், இப்போது அப்படியே மாற்றப்பட்டுள்ளது. மூர்த்தி குடிப்பழத்தில் இருந்து மீண்டும் ஒரு நல்ல அண்ணனாகவும் பொறுப்பான பிள்ளை மற்றும் புருஷனாக மாறி உள்ளார்.
45
Kayal Serial Shooting:
மதுரவாயிலில் நடந்த படப்பிடிப்பு:
இந்நிலையில் இவரின் மனைவி, சென்னை மதுரவாயல் பகுதியில்... ஒரு ஷூட்டிங் ஹவுசில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கின் போது, அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது கடந்த 3 வருடமாக ஐயப்பன், முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி வீட்டுக்கு வருவதில்லை என்றும், குழந்தைகளை கூட வந்து பார்ப்பதில்லை, பணம் கொடுப்பதில்லை என கத்தி கண்ணீர் விட்டு அழுது அவரிடம் நியாயம் கேட்டு பிரச்சனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஷூட்டிங் பல மணிநேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.