Hansika Debut Movie
ஹன்சிகா மோத்வானி:
'மாப்பிள்ளை' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், பார்ட்னர் என்று பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
Hansika Marriage:
திருமணத்திற்கு பிறகும் கூட ஹன்சிகா சினிமாவில் கவனம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரௌடி பேபி, மேன், காந்தாரி ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பட வாய்ப்புகள் குறையவே, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கூட ஹன்சிகா தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், எந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. தற்போது நிஷா என்ற தெலுங்கு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
Hansika Bother Prashanth:
பிரசாந்த் மோத்வானி:
ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு, அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி, தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், விவாகரத்துக்கும் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து பிரசாந்த் மோத்வானி மற்றும் முஸ்கான் நான்சி ஜேம்ஸ் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஹன்சிகா கொடுமை படுத்துவதாக போலீசில் பரபரப்பு புகார்! நடிகையின் பதிவு வைரல்!
Muskaan Nancy James Complaint:
முஸ்கான் நான்சி ஜேம்ஸ்
இந்த நிலையில் தான் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்... மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் பிரசாந்த் மோத்வானியின் அம்மா மோனா மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்கவில்லை என்றும் அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
Police Complaint Against Hansika:
மும்பை அம்பாலி போலீசார் வழக்கு பதிவு:
இதைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி மட்டுமின்றி அவருடைய அம்மா மற்றும் சகோதரர் ஆகிய மூவர் மீது மும்பை அம்பாலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முன் ஜாமீன் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தான் சகோதரரின் மனைவி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த ஹன்சிகா இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
Hansika Replay:
ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு:
மேலும், தனது சகோதரருக்கும் முஸ்கானுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இருவரும் 2022 ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் ஹன்சிகா அளித்த மனு மீதான விசாரணை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து மும்பை அம்பாலி காவல் நிலையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது (Police Ordered to Reply: Hansika Approaches Court).
அடேங்கப்பா! மாலத்தீவில் கணவருடன் ஊர் சுற்றும் நடிகை ஹன்சிகா.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Hansika Comback:
சினிமாவில் பிஸியாக இருக்கிறார்:
மேலும், ஹன்சிகா பிரபலம் என்பது மட்டுமின்றி அவரது அம்மாவின் வயது காரணமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகா அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக இருக்கிறார். கம்பேக் கொடுக்கும் ஹன்சிகாவை விரைவில் திரையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.