ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட தனுஷின் இட்லி கடை - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடித்து இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனுஷ் நடித்து இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் தனுஷ் (Dhanush), சைடு கேப்பில் படங்களையும் இயக்கி வருகிறார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பா பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து டைரக்ஷனுக்கு ரெஸ்ட் விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், கடந்த ஆண்டு மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுத்தார். அவர் இயக்கிய ராயன் படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இது தனுஷின் 50வது படமாகும்.
இயக்குனராக பிசியான தனுஷ்
ராயன் படம் நடிகர் தனுஷின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் 160 கோடி வரை வசூலித்து இருந்தது. ராயன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து படம் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கிய தனுஷ் அடுத்ததாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. அந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீண்டு வரும் முனைப்போடு அவர் இட்லி கடை (Idly Kadai) என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்.
இதையும் படியுங்கள்... தனுஷின் இட்லி கடைக்கு எகிறும் மவுசு! ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம்
இட்லி கடை திரைப்படத்தை இயக்குவது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனனும், வில்லனாக அருண் விஜய்யும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தை ஏப்ரல் மாதம், 10ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆவதாலும், ஷூட்டிங் இன்னும் நிறைவடையாததாலும் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தனர்.
இட்லி கடை படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில், இட்லி கடை படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம், இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இட்லி கடைக்கு முன்னதாக தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். அப்படத்தின் ரிலீசுக்கு பின்னரே இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா வெயிட்டிங்.
இதையும் படியுங்கள்... Dhanush Idli Kadai: இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா? ஆகாஷ் பாஸ்கரன் பளீச்!