நடிகர் ரவிக்குமார் காலமானார்; இவர் இந்த நடிகையின் முன்னாள் கணவரா?

Veteran Actor Ravikumar Death: தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த சம்பளம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Veteran Actor Ravikumar Passed Away at the age of 71 mma

ரஜினி - கமலுடன் நடித்த ரவிக்குமார்:

கே பாலசந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்து பிரபலமானவர் ரவிக்குமார். அதாவது இந்த படத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் ,ரவிக்குமார் ஆகியோருடன் சுஜாதா இணைந்து நடித்திருந்தனர். கமல் - ரஜினிகாந்த் அளவுக்கு இவரும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போனது. 

Veteran Actor Ravikumar Passed Away at the age of 71 mma

மரபுக்கவிதைகள்:

எனினும் மலையாள சினிமாவில் பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். பாலசந்தர் இயக்கிய மரபுக்கவிதைகள் என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார். ஏராளமான சீரியல்களில், அப்பா, மாமா, போன்ற அழுத்தமான வேடங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ரவிகுமார்.
 


சுமித்ராவின் முன்னாள் கணவர்:

71 வயதாகும் இவர், பிரபல நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் ஆவர். இருவரும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ரவிக்குமார். இரண்டாவது மனைவி மூலம், ரவிக்குமாருக்கு மகன் ஒருவரும் உள்ளார். தற்போது தன்னுடைய மகனுடன் சென்னையில் தான் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக சின்னத்திரையில் இருந்து மொத்தமாக ஒதுங்கினார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நாளை இறுதிச்சடங்குகள்:

இவருடைய உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரில் இல்லத்தில் இன்று மாலை அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், அதன் பின்னர் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என கூறப்படுகிறது. 

பேரதிர்ச்சியை ஏற்படுத்தி அடுத்த மரணம்:

கடந்த வாரம் நடிகர் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் மற்றும் இயக்குனர் மனோஜின் மரணம், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது இவரது மறைவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos

vuukle one pixel image
click me!