
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் தான் நடிகை தமன்னா மற்றும் சமந்தா. கேடி படம் மூலமாக தமிழில் அறிமுகமான தமன்னாவிற்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்தது. அப்படித்தான் வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, வீரம், தோழா, தர்ம துரை, தேவி, பாகுபலி, அரண்மனை 4 என்று பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக நடித்த அரண்மனை 4 படத்திற்கு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவும் இல்லை, வாய்ப்புகளும் இல்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதோடு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். திரையரங்குகளை விட நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால், தான் என்னவோ நடிகைகளும் தங்களது கவனத்தை வெப் சீரிஸ் பக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், தான் என்னவோ நடிகைகளும் தங்களது கவனத்தை வெப் சீரிஸ் பக்கம் செலுத்தி வருகின்றனர்.
தமன்னா, சமந்தா போன்ற நடிகைகள் ஏற்கனவே வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளனர். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் கட் கிடையாது. அதனால் எப்படி நடித்தார்களோ அப்படியே ஒளிபரப்பும் செய்யப்படும். அப்படி அவர்கள் சென்சார் இல்லை என்பதால் என்னவோ கொஞ்சம் ஓவராகவும், எல்லை மீறியும் நடித்துள்ளனர். அப்படி வரம்புகளை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
தமன்னா நடித்த வெப் சீரிஸ் ஜீ கர்தா:
கடந்த 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான வெப் சீரிஸ் ஜீ கர்தா. அருணிமா சர்மா இயக்கிய இந்த வெப் சீரிஸில் தமன்னா, சுஹைல் நய்யார், ஆஷிம் குலாட்டி, அன்யா சிங், சிமோன் சிங் ஆகியோ பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையை மையப்படுத்தி வெளியான இந்த வெப் சீரிஸில் தமன்னா கொஞ்சம் ஓவராகத்தான் நடித்திருந்தார்.
சமந்தா தி ஃபேமிலி மேன் 2:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அதற்கு முன்னதாக வெப் சீரிஸ்களில் நடித்து வந்த சமந்தா இப்போது சாகுந்தலம், குஷி படங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மா இண்டி பங்காரம் படம் மூலமாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸில் கொஞ்சம் எல்லை மீறீ நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த வெப் சீரிஸ் தான் தி ஃபேமிலி மேன் 2. கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் சீரிஸ் வெளியானது.
ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே - சேக்ரட் கேம்ஸ்
கிரைம் ஸ்டோரியை மையப்படுத்திய Sacred Games ('சேக்ரட் கேம்ஸ்') என்ற வெப் சீரிஸில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே துணிச்சலான ரோல் ஏற்று நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸில் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது.
காஜோல் - தி டிரையல் வெப் சீரிஸ்:
பாலிவுட் நடிகை காஜோல் கொஞ்சம் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். தி டிரையல் என்ற வெப் சீரிஸில் அவர் நடித்திருந்தார். கோர்ட் டிராமா கதையை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸானது கடந்த 2023 ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.