ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ்:
'வேட்டையன்' படத்தின் சுமாரான வரவேற்புக்கு பின்னர், ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒருவழியாக அறிவித்துள்ளது. அதன்படி, 'கூலி' திரைப்படம் 2025 ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.