நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிச்சாமி பணியாற்றி வருகிறார்.
24
பொங்கல் விருந்தாக வரும் ஜன நாயகன்
ஜன நாயகன் திரைப்படம் வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. எஞ்சியுள்ள படப்பிடிப்பையும் இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
34
ஜன நாயகன் விஜய் சம்பளம்
ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சூடுபிடித்துள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்துக்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் திகழ்கிறார். இப்படத்தின் டீசர் வருகிற ஜூன் 22ந் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக் ஆகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக போலீஸ் உடையில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுத்த அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தெறி படத்திற்கு பின் தளபதியை போலீஸ் கெட் அப்பில் பார்க்க உள்ளதால் பூரித்துப் போய் உள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் தளபதி வெற்றி கொண்டான் என கூறப்படுகிறது.