ஆர்த்தியின் கண்ணீர் பதிவால் ரவியை ரவுண்டு கட்டிய குஷ்பு, ராதிகா - என்ன சொன்னாங்க தெரியுமா?

Published : May 11, 2025, 01:10 PM IST

நடிகர் ரவி மோகனுடனான விவாகரத்துப் போராட்டத்தில் மனைவி ஆர்த்திக்கு மூத்த நடிகைகள் குஷ்பு சுந்தரும், ராதிகா சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

PREV
14
ஆர்த்தியின் கண்ணீர் பதிவால் ரவியை ரவுண்டு கட்டிய குஷ்பு, ராதிகா - என்ன சொன்னாங்க தெரியுமா?
Ravi Mohan vs Aarti Ravi

நடிகர் ரவி மோகனுடனான விவாகரத்துப் போராட்டத்தில் அவரது மனைவி ஆர்த்திக்கு, மூத்த நடிகைகள் குஷ்பு சுந்தரும் ராதிகா சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தந்தையாக தனது கடமைகளை ரவி மோகன் செய்யவில்லை என்றும், கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் பொதுவெளியில் தோன்றியது தான் பிரிவுக்கு காரணம் என்றும் ஆர்த்தி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தான் இரு நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

24
கெனிஷா உடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்

கடந்த ஆண்டு, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகனும், கெனிஷா பிரான்சிஸும் ஒன்றாகக் கலந்து கொண்டது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, கெனிஷாவும் ரவியும் தங்களுக்குள் தொழில்முறை சார்ந்த உறவு மட்டுமே உள்ளது என்று கூறியிருந்தனர். 

34
ஆர்த்தி அடுக்கிய குற்றச்சாட்டு

ஆனால், வேல் பிலிம்ஸ் உரிமையாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் இருவரும் ஒரே மாதிரியான உடையில் கலந்து கொண்டது, அவர்களின் உறவு குறித்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. இதையடுத்தே ஆர்த்தி தனது கருத்தைத் தெரிவித்தார். தந்தையாக தனது கடமைகளை ரவி செய்யவில்லை என்றும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னை ரவி கைவிட்டுவிட்டதாகவும் ஆர்த்தி குற்றம் சாட்டினார். ஆர்த்தியின் அறிக்கையைப் பகிர்ந்து குஷ்புவும் ராதிகாவும் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்தனர்.

44
ஆர்த்திக்கு குவியும் சப்போர்ட்

"ஒரு தாயின் வார்த்தைகள் எதிர்காலத்தில் சாட்சியாக நிற்கும்" என்று குஷ்பு எழுதினார். ஒற்றுமையைக் குறிக்கும் எமோஜியுடன் ராதிகா சரத்குமார் ஆதரவு தெரிவித்தார். ரவி மோகனின் முன்னாள் மனைவி என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ஆர்த்தி ஏற்கனவே ஊடகங்களிடம் கூறியிருந்தார். அவரின் இந்த அறிக்கைக்கு பின்னர் ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் ரவி மோகன், கெனிஷா உடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories