'கோட்' பட புரோமோஷன்...! இதை மட்டும் பண்ணவே கூடாது.. ரசிகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட தளபதி.!

First Published | Aug 7, 2024, 8:19 PM IST

தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் பிரமோஷனில் ரசிகர்கள் யாரும் கட்சியின் பெயரை போஸ்டரில் பயன்படுத்த கூடாது என விஜய் புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Actor Thalapathy Vijay Order:

தமிழ் சினிமாவில் ரூ.200 கோடி சம்பளம் பெறும் நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார். மேலும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். 
 

Venkat Prabhu, Vijay Movie

விஜயின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை ஒருபுறம் தீவிரமாக நடந்து வர, விஜய் தான் ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை முடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. எனவே படக்குழு இப்போதே படத்தின் புரமோஷன் பணிகளிலும் படு தீவிரம் காட்டி வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் சிங்கம் புலி நடித்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
 

Tap to resize

Goat movie Songs:

இதுவரை விஜய் நடித்துள்ள 'கோட்' படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன நிலையில் அணைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அச்சிடப்படும் போஸ்டர்களில், கட்சியின் பெயரை எக்காரணத்தை முன்னிட்டும் அச்சிடக் கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆக உத்தரவு போட்டு உள்ளாராம் தளபதி.
 

Goat Release date:

அதே நேரம் ரசிகர்கள் கட்சியின் பெயரை தவிர்த்து 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்கிற பெயரில் போஸ்டர் அடித்து அதனை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தளபதி இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர், சினேகா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து இளம் தளபதியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். இவர்களை தவிர லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரைவேட் ஜெட், ஆடம்பர பங்களா, விதவிதமான சொகுசு கார்கள் என.. கோடீஸ்வரராக வாழும் Jr NTR-யின் சொத்து மதிப்பு!

Latest Videos

click me!