விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் சிங்கம் புலி நடித்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, மகாராஜா திரைப்படத்தில் சிங்கம்புலி ஏற்று நடித்த 'நல்ல சிவம்' கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Nithilan Swaminathan Direct Maharaja movie:
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் 'மகாராஜா'. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப், மம்தா மோகந்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, மணிகண்டன், பாரதி ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
100 Cr collect this movie:
20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது. அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் மிகப்பெரிய பலமே விஜய் சேதுபதி மற்றும் நட்டியின் நடிப்பும் தான்.
maharaja movie Story
முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் விஜய் சேதுபதி, தன்னுடைய மகளை அம்மாவுக்கு அம்மாவாக, அப்பாவுக்கு அப்பாவாக இருந்து வளர்க்கும் நிலையில்... ஒரு குப்பை தொட்டியை தேட வேண்டும் என போலீசில் புகார் அளிப்பதும், அந்த குப்பை தொட்டிக்காக 4 லட்சம் வரை கொடுக்க தயார் என கூறுவதும்... பலரையும் சிந்திக்க வைக்கும் நிலையில், கதையில் தொய்வு இல்லாமல் அடுத்தடுத்து வெளியாகும் உண்மைகள் இப்படத்தின் மீதான பரபரப்பை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது.
Singam puli Character
அதே போல் இதுவரை எத்தனையோ திரைப்படங்களில் பாலியல் பிரச்சனை குறித்து பேசி இருந்தாலும், இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. இந்த படத்தில், நல்ல சிவம் என்கிற கதாபாத்திரத்தில்... இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் தன்னுடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார் சிங்கம் புலி.
Appu kutty is First choice
இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் இயக்குனர் தேர்வு செய்தது இவரை இல்லையாம். குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த அப்புகுட்டியை தானாம். ஆனால் தற்போது அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருந்ததால்... தன்னை ரிஜெக்ட் செய்து விட்டு, சிங்கம் புளியை நடிக்கவைத்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அப்புக்குட்டி தெரிவித்துள்ளார் .