1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம்.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்.. தீபிகா, ஆலியா இல்ல..

Published : Aug 07, 2024, 05:07 PM ISTUpdated : Aug 08, 2024, 10:47 AM IST

பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் யார் தெரியுமா?

PREV
17
1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம்.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்.. தீபிகா, ஆலியா இல்ல..

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பெரும்பாலும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். வித்தியாசமான ஆடைகள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஆனால் அவர் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். ஊர்வசி ரவுத்தேலே ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொதினே நடிப்பில் வெளியான 'ஸ்கந்தா' திரைப்படத்தில் 'கல்ட் மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு ஊர்வசி ரவுத்தேலா நடனமாடினார். இந்த பாடலில் வெறும் மூன்று நிமிட நடிப்பிற்காக அவர் ரூ. 3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்றார். இதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் மாறி உள்ளார்..

37
Urvashi Rautela

முன்னதாக, சிரஞ்சீவி நடித்த ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் தனது ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதற்கு ஊர்வசி ரவுத்தேலா ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.

47
Urvashi Rautela

ஊர்வசி ரவுடேலா இன்ஸ்டாகிராமில் 71 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார். மேலும் அவரின் சொத்து மதிப்பு ரூ.550 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த இளம் இந்தியர் என்ற பெருமையையும் ஊர்வசி ரவுத்தேலா பெற்றுள்ளார்.

57
Urvashi Rautela

ஊர்வசி தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் 'NBK 109' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக, பிரபல ஐரிஷ் தற்காப்புக் கலைஞரும் தொழில்முறை குத்துச்சண்டை வீரருமான கோனார் மெக்ரிகோரிடம் அவர் பயிற்சி பெறுகிறார்.

67
Urvashi Rautela

ஊர்வசி குறித்து மெக்ரிக்கோர் பேசிய , "ஷாருக்கானுக்குப் பிறகு எனக்குத் தெரிந்த ஒரே பாலிவுட் திரைப்பட நடிகர் ஊர்வசி ரவுடேலா மட்டுமே. ஊர்வசி பாலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார். அவர் ஒரு அற்புதமான நடிகை.” என்று கூறியிருந்தார்.

 

77
Urvashi Rautela

2013 இல் 'சிங் சாப் தி கிரேட்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா, 2014 இல் 'மிஸ்டர் ஐராவதா' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். அவர் 2022-ல் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories