அழகை மெருகூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள்.. லிஸ்ட் பெருசா இருக்கே..

First Published | Aug 7, 2024, 3:20 PM IST

அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகூட்டிய நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகைகளை பொறுத்த வரை அழகு என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அழகு இருக்கும் வரை தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் வரும். எனவே தங்கள் அழகை பராமரிக்க நடிகைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில நடிகைகள் தங்கள் அழகுக்காக தங்கள் முக அமைப்பை மாற்ற அறுவை சிகிச்சை செய்கின்றனர். அப்படி அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகூட்டிய நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ தேவி :

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அந்த காலக்கட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அவர் தனது மூக்கை ஆபரேஷன் செய்து கொண்டார். ஆனால் அதன்பின்னர் அவரின் முக அமைப்பே மாறிவிட்டது. எனினும் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

Tap to resize

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அவர் கடைசியாக அன்னப்பூரணி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்..

சமந்தா

கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சாகுந்தலம், யசோதா, குஷி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் , அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான சலார் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.ஸ்ருதிஹாசன் அழகுக்காக மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஸ்ரேயா

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி. இவவரின் பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

காஜல் அகர்வால்:

காஜல் அகர்வால் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி மற்றும் முன்னணி நடிகை. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார். காஜல் தனது அழகுக்காக மூக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.

தமன்னா:

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமனா. தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமன்னாவும் தனது அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

பிரியாமணி:

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

Latest Videos

click me!