தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் இதுவரை ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கி வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம். இப்படத்தோடு சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் விஜய், அதைத் தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் விஜய் தொடங்கினார்.
24
rolls Royce car
நடிகர் விஜய் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக வெளிநாட்டு கார்கள் மீது விஜய்க்கு கிரேஷ் அதிகம். அதனால் தனக்கு மிகவும் பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் இருந்து இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். அந்த காரை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக விஜய் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.
அதன் மூலமாகவே விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் மிகவும் பரவலாக பேசப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தன்னுடைய பேவரைட் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்ய கொடுத்திருந்த விளம்பரம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அவர் ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி தன்னிடம் இருந்த வோல்வோ கார் ஒன்றையும் விற்றிருக்கிறார். இந்த இரண்டு கார்களையும் அவர் திடீரென விற்றதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
44
lexus car
அந்த இரண்டு கார்களை விஜய் விற்றதே புது கார் வாங்கத் தானாம். அதன்படி தற்போது லெக்சஸ் காரை புதிதாக வாங்கி இருக்கிறார் விஜய். அதன் விலை ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜும் லெக்சஸ் கார் தான் வைத்திருக்கிறார். அவர் விக்ரம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததற்காக நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசாக அந்த லெக்சஸ் காரை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.