தெலுங்கில் ரீமேக்காகும் ஆவேஷம்.. ஃபஹத்தின் ரங்கா கேரக்டரில் நடிக்கும் மாஸ் ஹீரோ.. எகிறும் எதிர்ப்பார்ப்பு..

First Published | Aug 7, 2024, 2:21 PM IST

பிளாக்பஸ்டர் ஹிட்டான ஆவேஷம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதில் ஃபஹத் ஃபாசிலின் கேரக்டரில் நடிக்க உள்ள ஹீரோ யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Aavesham

கடந்த ஏப்ரல் மாதம் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடி-நகைச்சுவை படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

aavesham

ரங்கா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருந்த ஃபஹட் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஜித்து மாதவன் இயக்கிய இந்த படம், உலகம் முழுவதும் 156 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக மாறியது.

Tap to resize

Aavesham Telugu remake

இந்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ஆவேஷம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதில் ஃபஹத் ஃபாசிலின் கேரக்டரில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பாலய்யாவின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைச்சுவையான உள்ளூர் டான் ரங்காவின் கதாபாத்திரத்தை தெலுங்கு திரையில் அவர் கொண்டு வருவார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தங்கள் சீனியர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக 3 மாணவர்கள் ரங்கா என்ற உள்ளூர் கேங்க்ஸ்டரின் உதவியை நாடுகின்றனர். அதன்பின்னர் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாகவும் சொன்ன படம் தான் ஆவேஷம்.

Aavesham

நட்பு, பழிவாங்குதல் மற்றும் கல்லூரி வாழ்க்கையில் புதிதாக சேரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என பல விஷயங்கள் ஆவேஷம் படத்தில் பேசப்பட்டிருக்கும். மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ் மற்றும் சஜின் கோபு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

Balakrishna

இதனிடையே பாலகிருஷ்ணா பல படங்களில் நடித்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்று பாபி கொல்லி இயக்கும் NBK 109 என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  பாபி தியோலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Actor Fahadh

மறுபுறம், ஃபஹத் பாசில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் புஷ்பா 2 இல் நடிக்கிறார். ரஜினியின் வேட்டையன் படத்தில் ஃபஹத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!