இதல்லவா பிரெண்ட்ஷிப்... அன்று முதல் இன்று வரை ரஜினியின் ஜிகிரி தோஸ்த் ஒருத்தர் தான் - யார் அவர்?

First Published | Aug 7, 2024, 1:14 PM IST

நடிகர் ரஜினிகாந்த் பலருடன் நட்புடன் பழகி வந்தாலும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Rajinikanth

பெங்களூருவில் பஸ் கண்டெக்டராக பணியாற்றி வந்தவர் ரஜினிகாந்த். இவரின் ஒரிஜினல் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக் கொண்டார். தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் கவனம் ஈர்த்து இன்று தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராஜ வலம் வருகிறார் ரஜினி. 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆவருடன் திரையுலக பயணம் தொடர்ந்து வருகிறது. 

Rajinikanth, Raj bahadur

இன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் ரஜினி தான். ரஜினிகாந்திற்கு தமிழ் சினிமாவில் கமலை போல், தெலுங்கில் மோகன் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் இவர்களை விட ரஜினியுடன் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.

Tap to resize

Rajinikanth Friend Raj bahadur

அவர் பெயர் ராஜ் பகதூர். பெங்களூருவில் ரஜினிகாந்த் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்து வந்தபோது ரஜினியின் மேனரிசம், ஸ்டைல் ஆகியவற்றை பார்த்து இம்பிரஸ் ஆன ராஜ் பகதூர், நீ ஏன் சினிமாவில் ட்ரை பண்ண கூடாதுனு சொன்னதோடு, அவரை ஊக்கப்படுத்தி நடிக்க அணுப்பியதும் ராஜ் பகதூர் தான்.

இதையும் படியுங்கள்... கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்... தன் ராஜதந்திரத்தால் 4 மடங்கு அதிக லாபம் பார்த்த கமல்

Rajinikanth Best Friend

ராஜ் பகதூர் பேச்சைக் கேட்டு சென்னைக்கு வந்த நடிப்பு பயிற்சி எடுக்கத் தொடங்கிய ரஜினிக்கு செலவுக்காக தன் வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை அனுப்பி வைத்தவர் ராஜ் பகதூர். இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றளவும் ரஜினியிடம் உதவி என ஒரு முறை கூட கேட்டதில்லையாம். அந்த அளவுக்கு நட்பின் இலக்கனமாக திகழ்ந்து வருகிறார் ராஜ் பகதூர்.

Rajinikanth, Raj bahadur friendship

அதுமட்டுமின்றி தன் நண்பனை காண ஆண்டுக்கு ஒரு முறையாவது பெங்களூருவுக்கு சென்றுவிடுவாராம் ரஜினி. அதே சமயம் ராஜ் பகதூரும் தன் பேமிலியோடு சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்து தங்கள் பழைய கால நினைவுகளையெல்லாம் பகிர்ந்துகொள்வதுண்டாம். இதுபோன்ற நட்பு கிடைப்பது உண்மையிலேயே அபூர்வம் தான். 

இதையும் படியுங்கள்... சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவிய சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... மகாநதி சீரியலில் இனி கங்கா இவர் தான்

Latest Videos

click me!