சொந்த தாயிடம் இருந்து விலகி இருக்கும் நாக சைதன்யா.. சித்தி அமலாவுடன் நெருக்கம்.. இதுதான் காரணமா?

Published : Aug 07, 2024, 01:41 PM IST

நடிகர் நாக சைதன்யா தனது தாயிடம் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார்.

PREV
16
சொந்த தாயிடம் இருந்து விலகி இருக்கும் நாக சைதன்யா.. சித்தி அமலாவுடன் நெருக்கம்.. இதுதான் காரணமா?

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனா, திரைப்பட தயாரிப்பாளரான டாக்டர் டி. ராமாநாயுடுவின் மகள் லட்சுமி டகுபதியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் நாக சைதன்யா. எனினும் 1990-ம் ஆண்டு நாகார்ஜுனா லட்சுமி தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். தனது தாயும் தந்தையும் பிரிந்த பிறகு நாக சைதன்யா தனது தந்தையுடன் இருக்க முடிவு செய்தார்.

26
Nagarjuna Akkineni

இதனிடையே முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் நாகார்ஜுனா நடிகை அமலா உடன் பல படங்களில் இணைந்து நடித்தார். படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே உருவான நட்பு காதலாக மாறியது. சில மாதங்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் 1992-ம் ஆண்டில் நாகார்ஜுனாவும் அமலாவும் திருமணம் செய்து கொண்டனர். நாகார்ஜுனா - அமலா தம்பதிக்கு அகில் அக்கினேனி என்ற மகன் இருக்கிறார்.

36
amala naga chaitanya Step Mother

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.. ஏ மாய ச்சேசவே, தடக்கா, மனம், பிரேமம், பங்காரு போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார். நாக சைதன்யா தனது தந்தை நாகார்ஜுனா மற்றும் அவரது சித்தி அமலா அக்கினேனியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

46

நாகார்ஜுனாவிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு, லக்ஷ்மி டக்குபதி சுந்தரம் மோட்டார்ஸின் கார்ப்பரேட் நிர்வாகியான சரத் விஜயராகவனை 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் லட்சுமி இன்டீரியர்ஸ் என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

56

நாகார்ஜுனாவும் லட்சுமியும் தங்கள் பிரிவால் தங்கள் மகன் நாக சைதன்யாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். இருப்பினும், நாக சைதன்யாவுக்கு தனது தாய் 2-வது திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர் தனது தாயிடம் விலகி இருக்க முடிவு செய்ததாகவும் இணையத்தில் பல வதந்திகள் பரவின.

66
Naga Chaitanya

ஆனால் இந்த வதந்திகளை மறுத்த நாக சைதன்யா, தனது வேலை காரணமாக ஹைதாபாத்தில் இருப்பதாகவும் தான் அடிக்கடி அமெரிக்காவில் இருக்கும் தனது தாயை சென்று பார்த்து வருவதாகவும் கூறினார். அமெரிக்காவில் உள்ள மற்ற இடங்களுக்கு வெகேஷனுக்கு செல்வதாகவும் கூறியிருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories