ரஜினி - லதா முதல் ஃபஹத் - நஸ்ரியா வரை.. அதிக வயது வித்தியாசம் கொண்ட நட்சத்திர தம்பதிகள்..

First Published | Aug 7, 2024, 4:40 PM IST

திருமண உறவில் கணவன் மனைவிக்கு இடையே குறிப்பிட வயது வித்தியாசம் இருக்கும்.. அந்த வகையில் அதிக வயது வித்தியாசம் கொண்ட சில  தென்னிந்திய பிரபல தம்பதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

Rajinikanth Latha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1981-ம் ஆண்டு லதா ரங்காச்சாரியை மணந்தார். லதாவை விட ரஜினி கிட்டத்தட்ட 10 வயது மூத்தவர். இந்த தம்பதியின் திருமண வாழ்க்கை 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத சூப்பர்ஸ்டாராக ரஜினி இருக்கிறார். ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Chiranjeevi surekha

மெகாஸ்டார் சிரஞ்சீவி 1980 இல் சுரேகாவை திருமணம் செய்தார். சிரஞ்சீவிக்கும் சுரேகாவுக்கும் 6 வயது வித்தியாசம். இந்த தம்பதிக்கு பிரபல நடிகர் ராம் சரண் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். சிரஞ்சீவியின் வலுவான கூட்டாண்மையை பிரதிபலிக்கும் வகையில் பொது நிகழ்ச்சிகளில் சுரேகாவும் கலந்து கொள்கிறார்.

Tap to resize

Nagarjuna Amala

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி நடிகை அமலாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே 8 வயது வித்தியாசம் உள்ளது. 1992 இல் திருமணம் செய்த கொண்ட இந்த தம்பதி அன்பான பிணைப்பைப் பராமரித்து, தங்கள் மகன் அகிலையும் வளர்த்து வருகின்றனர். நடிகை அமலா, குடும்பம் மற்றும் பரோபகார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக தனது திரைப்பட வாழ்க்கையில் ஒதுங்கி உள்ளார்.

Mammootty wife

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 1979 இல் சல்பத்தை மணந்தார், சுல்பத்தை விட மம்முட்டி 10 வயது மூத்தவர். அவர்களின் திருமணம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது அன்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் சுருமி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Ajith shalini

தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திர தம்பதிகளில் அஜித் ஷாலினி ஜோடியும் ஒன்று. அஜித்திற்கும் ஷாலினிக்கும் 8 வயது வித்தியாசம் உள்ளது. திருமணத்திற்கு நடிப்பதை கைவிட்ட ஷாலினி குடும்பத்தை கவனித்து கொள்கிறார். இந்த தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Venkatesh Neeraja

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நீரஜாவை 1985 இல் திருமணம் செய்துகொண்டார். நீரஜாவை விட வெங்கடேஷ் 10 வயது மூத்தவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவர்களின் திருமணம் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

Arya Sayyeshaa

ஆர்யா மற்றும் சாயிஷா 

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆர்யா தன்னை விட 17 வயது குறைவான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். .இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

fahad nazria

வயது வித்தியாசத்தை தாண்டிய காதலுக்கு ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா திருமணம் ஒரு சிறந்த உதாரணம். ஃபஹத் பாசிலும் நஸ்ரியாவும் 2014 இல் திருமணம் செய்து கொண்டனர். ஃபஹத் ஸ்ரியாவை விட 12 வயது மூத்தவர். இருவரும் வெற்றிகரமான பிரபலங்களாக வலம் வருகின்றனர். 

Latest Videos

click me!