தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நரேஷ் பாபு. இவர் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் ஆவார். நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகிவிட்டது. இந்த மூன்று திருமணமும் தோல்வியில் முடிந்ததை அடுத்து தற்போது 4-வது திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் நரேஷ்.
இந்நிலையில், நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நரேஷ் பாபு, ரம்யா ரகுபதி தன்னை கொல்ல முயற்சி செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். 2010-ம் ஆண்டு திருமணம் செய்ததில் இருந்தே ரம்யா தன்னை டார்ச்சர் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.