AK62 : டுவிட்டரில் சைலண்டாக விக்னேஷ் சிவன் பார்த்த வேலையால் அஜித் ரசிகர்கள் குழப்பம்! என்ன இப்படி பண்ணிட்டாரு?

First Published | Jan 30, 2023, 9:27 AM IST

ஏகே 62 படம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், டுவிட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சைலண்டாக செய்துள்ள வேலை அஜித் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. 

அஜித்தின் ஏகே 62 படத்தை பற்றி தான் தற்போது கோலிவுட்டே பேசிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அவர் சொன்ன கதை அஜித்துக்கும், சுபாஸ்கரனுக்கும் பிடிக்காததால் அவரை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து ஏகே 62 படத்தை எடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அப்படத்தை இயக்க விஷ்ணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ், பிரசாந்த் நீல், மகிழ் திருமேணி ஆகிய இயக்குனர்களை அனுகியதாகவும், இறுதியாக அந்த பட்டியலில் இருந்து இயக்குனர் மகிழ் திருமேணியை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்றும் கூறப்பட்டது. மறுபுறம் லைகா நிறுவனமோ, விக்னேஷ் சிவனோ இந்த ஏகே 62 பஞ்சாயத்து குறித்து எந்தவித அப்டேட்டும் கொடுக்காமல் மெளனம் காத்து வந்தனர். 

இதையும் படியுங்கள்... இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Tap to resize

இந்நிலையில், டுவிட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சைலண்டாக செய்துள்ள வேலை அஜித் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. அது என்னவென்றால், அஜித்தின் ஏகே 62 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ள தகவல் கடந்த ஜனவரி 16-ந் தேதியே வெளியானது. இதற்கான அறிவிப்பையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது அந்த டுவிட்டை விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளது தான் அஜித் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

விக்னேஷ் சிவன் ஏகே 62 படம் குறித்த டுவிட்டை லைக் செய்துள்ளதால், அவர் தான் அந்த படத்தை இயக்கப்போகிறாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. தற்போது ஏகே 62 படத்தின் இயக்குனர் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தான் தான் ஏகே 62 படத்தின் இயக்குனர் என்பதை இதன்மூலம் விக்னேஷ் சிவன் சூசகமாக அறிவித்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். தயாரிப்பு தரப்பிலோ அல்லது விக்னேஷ் சிவன் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவுக்கும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  AK 62 படத்தை இயக்க வந்த திடீர் அழைப்பு... விஜய்காக எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்

Latest Videos

click me!