தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களும், தெலுங்கில் போலா சங்கர், தசரா போன்ற படங்களும் தயாராகி வருகின்றன. இவ்வாறு அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது காதல் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து மற்றுமொரு காதல் வதந்தி பரவியது. அதன்படி அவர் கேரளாவை சேர்ந்த ரெஸார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் இருவரின் திருமணத்துக்கும் பெற்றோர் சம்மதித்தாலும், கீர்த்தி படங்களில் பிசியாக நடித்து வருவதால் 3 ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவின.