தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், வித்தியாசம் காட்டி நடித்து வரும் சாய் பல்லவி, நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக 'விரத பருவம்' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியானது.
இந்த பேட்டியில், வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என சாய்பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சாய் பல்லவி மார்ச் மாதம் வெளியான 'காஷ்மீர் பைல்ஸ்' என்னும் திரைப்படத்தை குறிப்பிட்டு தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தில் அந்த காலத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்தி இருப்பார்கள். அது வன்முறை என்றால் பசுவை அழைத்துச் செல்லும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பி செல்வதும் தவறுதான் என குறிப்பிட்டு பேசி இருந்தார் சாய் பல்லவி.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!
மேலும் இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒரு சிலர் சாய்பல்லவிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் சாய்பல்லவி 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்தை அவமதித்துவிட்டார் என்றும் காஷ்மீர் பற்றி தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்றும் கூறினர்.
மேலும் செய்திகள்: கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!
இந்த நோட்டீசை ரத்து செய்யுமாறு சாய்பல்லவி தரப்பில் இருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் இந்த வழக்கு சட்ட விரோதமானது, அநீதியானது மற்றும் சட்டத்தை மீறக்கூடியது என குறிப்பிட்டு இருந்தார். மனுவில் புகார்தாரரின் உணர்வுகள் ஏன் புண்பட்டது? புகார் எதனை பற்றியது? என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என்று காரணம் காட்டி இந்த மனுவை ரத்து செய்யமுடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது தெலுங்கானா நீதிமன்றம்.