வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த நிவின்பாலி தற்போது மகாவீர்யர், துறைமுகம், படவேடு பெயரிடப்படாத இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதில் மகாவீர்யர் படத்தை அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. காலப்பயணம், கற்பனை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த ட்ரெய்லரை காட்டிலும் இதில் பங்கேற்ற நிவின் பாலி தான் வைரல் ஆகி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு.. சுழற்றி அடிக்கும் பிரச்சனை... லீனா மணிமேகலைக்கு LOC!! போபால் போலீசார் அதிரடி!!