ஒரேநாளில் 2 ஜெயிலர் படம் ரிலீஸ்.. ரஜினி பட வசூலுக்கு வேட்டு வைக்க நடக்கும் வேலை! தகர்த்தெறிவாரா சூப்பர்ஸ்டார்?

First Published | Jul 25, 2023, 8:37 AM IST

தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்துக்கு போட்டியாக அதே பெயரில் மலையாள படம் ஒன்றும் அதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், வில்லனாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவராஜ் குமாரும் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் ரஜினியுடன் தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மிர்ணா, வஸந்த் ரவி, மாரிமுத்து, யோகிபாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஜெயிலர் படம் சிலைக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே அவரது இசையில் வெளியான காவாலா மற்றும் ஹுகூம் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதனிடையே வருகிற ஜூலை 28-ந் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Tap to resize

jailer

இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக நேற்று ஆயிரம் இலவச பாஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்த பாஸ்கள் அனைத்தும் 15 நிமிடத்தில் காலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஜெயிலர் படத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இப்படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... கண்கலங்கி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா.. மௌனம் வெளிப்படுத்திய ஆயிரம் வலிகள்! பதறியபடி ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Jailer

அந்த வகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பெயருடன் மலையாளத்திலும் ஒரு திரைப்படம் உருவாகி உள்ளதால், தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் படத்தின் தலைப்பை மாற்றி கேரளாவில் ரிலீஸ் செய்யும்படி மலையாள ஜெயிலர் டீம் வேண்டுகோள் வைத்தது.

jailer

ஆனால் இதனை தமிழ் ஜெயிலர் படக்குழு ஏற்கவில்லை. இதனால் தமிழ் ஜெயிலர் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், தங்களது ஜெயிலர் படமும் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதியே ரிலீஸ் ஆகும் என மலையாள ஜெயிலர் படக்குழு அறிவித்துள்ளதால் தற்போது கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு படமும் ஒரே பெயருடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தமிழ் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சன் பிக்சர்ஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் என்ன?.. படத்தில் இணையும் ஒரு புதிய பிரபலம் - Interesting தகவல்கள் இதோ!

Latest Videos

click me!