தமிழ் சினிமாவில், இன்று முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு தான், இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பதை அவரே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதே போல் இவரின் தோற்றத்தை வைத்து பலர் கிண்டல் செய்த நிலையில், நாளடைவில் அதுவே அவருக்கு மிகப்பெரிய பிளஸ்சாக மாறி, முன்னணி காமெடி நடிகராக இவரை உயர்த்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில், சிறிய சிறிய காமெடி வேடத்தில் நடித்த இவருக்கு... திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால், 'யாமிருக்க பயமேன்' படத்தில் இடம்பெற்ற 'பண்ணி மூஞ்சி வாயா' காமெடி தான். இதை தொடர்ந்து அடுத்தடுத்து, விஜய், அஜித், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி ரோலில் நடித்து அசத்தினார்.
இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடிக்க துவங்கினார். சமீபத்தில் கூட இவர் கதையின் நாயகனாக நடித்த பொம்மை நாயகி என்கிற திரைப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ஷான் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை பா.இரஞ்சித் தான் தயாரித்து இருந்தார். இதையடுத்து டஜன் கணக்கான படங்களை கைவசம் வைத்து, செம்ம பிசியாக நடித்து வருகிறார் யோகிபாபு.
முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி தொடர்! புதிய தொடர் என்ன தெரியுமா?
படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால், 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். காமெடியனாக நடிக்க 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு மற்றும் இரண்டு கார்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சொந்த ஊரான ஆரணியில் இவருக்கு சில வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளன.