Suriya
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட்ரோ படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்கள் 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Retro Movie Suriya
ரெட்ரோ திரைப்படத்தின் டீசர் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆனது. அதில் ரஜினியின் தளபதி பட பாணியில் ஒரு லவ் புரபோசல் சீன் இடம்பெற்று இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ், தளபதி படத்தின் ரெபரன்ஸில் தான் ரெட்ரோ பட காதல் காட்சியை படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் காதலனாக மட்டுமின்றி கேங்ஸ்டராகவும் மிரட்டி இருக்கிறார் சூர்யா. இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படம் கன்பார்ம் ஹிட் அடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரொமாண்டிக் ரோலக்ஸாக மாறிய சூர்யா! மாஸ் டைட்டில் உடன் வந்த Suriya 44 டீசர்
Retro Release Update
நந்தா படத்தில் முதன்முதலில் சிக்ரெட் பிடிக்க கற்றுக் கொண்ட சூர்யா, அதன் பின்னர் தன் படங்களில் தம் அடிக்கும் காட்சிகளில் பெரியளவில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் கேரக்டருக்காக சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த சூர்யா, அதன்பின்னர் ரெட்ரோ படத்தில் தான் மீண்டும் சிக்ரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் இணையத்தில் கசிந்துள்ளது.
Retro vs Good Bad ugly
அதன்படி டீசரிலேயே இப்படத்தை 2025-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக குறிப்பிட்டிருந்த நிலையில், ரெட்ரோ திரைப்படத்தை வருகிற மே 1ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போட்டியாக சூர்யாவும் களமிறங்க உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் செம சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... தோளுக்கு மேல் வளர்ந்த மகன்; ஹீரோயின் போல் ஜொலிக்கும் மகள்! வைரலாகும் சூர்யாவின் பேமிலி போட்டோ