நடிகை ராதிகா, வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு தன்னுடைய திரை பயணத்தை துவங்கினாலும்... சில வருடங்களிலேயே தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவரது குடும்பமே ஒரு நடிகர்கள் கும்பம் என்று கூறும் அளவிற்கு, இவரது தந்தையை தொடர்ந்து, அண்ணன் ராதா ரவி, தங்கை நிரோஷா, நிரோஷாவின் கணவர் ராம்கி, என அனைவருமே திரையுலகை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
ரேயான் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளை பெற்று கொண்டு செட்டில் ஆகி விட்டதால் அவர் மீண்டும் திரையுலகில் நடிக்க வர வாய்ப்பு இல்லை என்றாலும், வருங்காலத்தில் ராதிகாவின் மகன் நடிக்க வாய்ப்புகள் உள்ளது.
60 வயதிலும் 35 வயது போல் இளமை பொங்கி வழியும் ராதிகா... இன்று தன்னுடைய பிறந்த நாளை மிக பிரமாண்டமாக திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
பிறந்த நாளில் மாடர்ன் தேவதையாக மின்னிய ராதிகா கண்களை கவரும் விதத்தில் கருப்பு நிற லாங் மேக்சி உடை அணிந்திருந்தார்.
பிரபலங்களை தவிர சரத்குமாரின் முன்னாள் மனைவி மகள்களும், நடிகையுமான வரலக்ஷ்மி, அவரது தங்கை, மற்றும் ராதிகாவின் உறவினர்கள் என பலர் இந்த பார்ட்டியை கொண்டாடியுள்ளனர்.
70ஸ் மற்றும் 80ஸில் பிரபலமாக இருந்த நடிகர் - நடிகைகளும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் வேறு லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.