விக்ரமில் ஏன் காட்சி தரவில்லை..பரபரப்பு கேள்விக்கு பக்காவான பதில் சொன்ன கார்த்தி

First Published Aug 21, 2022, 7:55 PM IST

கார்த்தியின் குரல் மட்டுமே குடிசைக்குள் இருந்து வருவது போல படத்தில் காட்டப்பட்டிருக்கும். இதன் காரணமாக  விக்ரம் படத்தில் சூர்யா வந்திருந்த நிலையில் ஏன் கார்த்தி இடம் பெறவில்லை என்கிற கேள்விகள் எழுந்தது . 

karthi

இரண்டாவது தலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தென் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நபராக வளர்ந்து வருகிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் திறன் கொண்ட கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான இந்தப் படத்தில் வந்தியதேவனாக இவர் வரும் காட்சிகளை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக இவர் இடம் பெற்ற பொன்னியின் நதி என்னும் முதல் சிங்கிள் வெளியாகிய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. தற்போது இரண்டாவது பாடலும்  வெளியாகிவிட்டது.

மேலும் செய்திகளுக்கு...அரைகுரை ஆடையில் ஜிம்மில் இருந்து வெளிவந்த நேஹா ஷர்மா

karthi

இதற்கிடையே படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாக்களில் கார்த்தி பேசியிருந்ததும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து இருந்தது. தமிழர்களின் பண்பாடு குறித்த இவரின் ஒவ்வொரு கருத்தும் இளைஞர்களின் மனதில் ஆழ ஊன்றியது என்றே கூறலாம்.

முன்னதாக கார்த்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க இரவு காட்சிகளே இடம் பெற்று இருந்தது. சிறை தண்டனை முடிந்தது ரிலீசாகும் டில்லி மகளைப் பார்க்கும் ஆசையில் காத்திருக்கையில் போதை பொருள் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் காவல்துறையினரே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொள்கிறார் என்பதை கைதி படத்தின் கதையாகும். இந்த படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் குறித்த துணுக்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...கணவன் மற்றும் மகனுடன் பிங்க் நிற பனியனில் தென்பட்ட கரீனா கபூர்

இதை அடுத்து கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். அந்த அளவிற்கு கைதி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு கைதி படத்தின் வெற்றி தளபதி விஜய் உடனான கூட்டணிக்கும் வழிவகைத்திருந்தது. இந்த படப்பிடிப்பின் போது தான் விக்ரமில் ஒப்பந்தமாகி இருந்தார் இயக்குனர்.

 நான்கு ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு கமலஹாசனின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அரசியல் பிக் பாஸ் என பிசியாக இருந்த உலக நாயகன் இறுதியாக விக்ரமுக்கு நாட்கள் ஒதுக்கி படத்தை முடித்துக் கொடுத்திருந்தார். நீண்ட இடைவெளி என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. படம் வெளியாகி தடாதடி வெற்றிகளை பெற்றது என்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...டூ பீஸ் பிகினியில் பூனம் பஜ்வா.. நீச்சல் குளத்தில் ரெஸ்ட் எடுக்கும் ஹாட் நொடிகள்..

vikram

400 கோடிகளுக்கு மேல் லாபத்தை ஈட்டி முன்னணி இயக்குனரில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்ற முத்திரையை பெற்று கொடுத்தது விக்ரம். அதோடு கமலஹாசனின் சிறந்த படங்களில் ஒன்றாக விக்ரம் மாறியுள்ளது. இந்த படத்தின் இறுதியில் விக்ரம் 2 மற்றும் கைதி இரண்டாம் பாகம் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதில் தீனா மற்றும் அவரது மகள் மட்டுமே இடம்பெற்று இருப்பார்கள்.

karthi

கார்த்தியின் குரல் மட்டுமே குடிசைக்குள் இருந்து வருவது போல படத்தில் காட்டப்பட்டிருக்கும். இதன் காரணமாக  விக்ரம் படத்தில் சூர்யா வந்திருந்த நிலையில் ஏன் கார்த்தி இடம் பெறவில்லை என்கிற கேள்விகள் எழுந்தது . 

இதற்கு ஆடியோ லாஞ்சில் பதில் கூறியிருந்த கார்த்தி, வந்திய தேவனுக்காக நீண்ட முடி வளர்த்திருந்ததாகவும் அந்த தோற்றத்தில் டில்லி கதாபத்திரத்தில் நடிக்க இயலாது என்பதால் தான் காட்சியளிக்காமல் வெறும் குரல் மட்டும் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

click me!