மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' இத்தனை கோடி வசூலா? வேற லெவலில் கெத்து காட்டும் தனுஷ்!

First Published | Aug 21, 2022, 7:19 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில், வெளியாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில், தனுஷ் புஃட்  டெலிவரி பாய்யாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் இப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.
 

மேலும் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் நடித்துள்ள இந்த படத்திற்கு, அனிரூத் சுமார் 7 வருடங்களுக்கு பின்னர் இசையமைத்துள்ளார்.  இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: அப்ரூவர் ஆன ராதாரவி.. இந்த ஒரு படம் தான் ஓடுது..! இவர் தான் Born ஆக்டர்! மேடையில் புகழாரம்!
 

Tap to resize

கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடித்து திரையரங்கில் வெளியாகும் இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
 

அதன்படி இப்படம் முதல் நாளே ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்தகாக தகவல் வெளியான நிலையில், தற்போது மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சுமார் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். உலகளவில் இப்படம் ரூ. 32 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!
 

Latest Videos

click me!