Suriya Cried Because of Diya's Message : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் ஆனது. நடிகை ஜோதிகாவை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார் சூர்யா. இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில் தியா தற்போது பள்ளிப்படிப்பை முடிக்க உள்ளார். அதேபோல் தேவ்வும் தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தியா, தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகிறார். பிள்ளைகளின் படிப்புக்காக சூர்யா தன்னுடைய குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
24
சினிமாவில் பிசியான சூர்யா - ஜோதிகா
சூர்யா, ஜோதிகா இருவரும் சினிமாவில் செம பிசியாக நடித்து வருகின்றனர். சூர்யா, பான் இந்தியா படங்களில் நடிக்க, ஜோதிகா பாலிவுட்டில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அங்கு இந்தி வெப் தொடர்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த டப்பா காட்ரில் என்கிற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
34
சூர்யாவுக்கு பிடித்த பாடல்
இதனிடையே ரெட்ரோ படத்தின் புரமோஷனுக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் நடிகர் சூர்யா கலந்துரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, தனக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றி பேசினார். குறிப்பாக தான் சோகப் பாடல்களை நிறைய கேட்பேன் அது எனக்கு பிடிக்கும் என கூறினார்.
தன்னுடைய மகள் தியா விரைவில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால், சமீபகாலமாக சித்தா படத்தில் இடம்பெற்ற ‘என் பார்வை உன்னோடு’ பாடலை அடிக்கடி கேட்கிறேன் என கூறி சூர்யா, ஒரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். அதன்படி ரெட்ரோ படப்பிடிப்பின்போது ஒரு நாள் நள்ளிரவு 3 மணியளவில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தபோது, தியாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்ததாம். மகளை நினைத்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் போது மகளிடம் இருந்து திடீரென வந்த அந்த மெசேஜால் எமோஷனலாகி நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்ததாக சூர்யா கூறினார். பாடல்கள் நம் வாழ்க்கையுடன் நினைவுகளாக நீடிக்ககூடியது என நெகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்தார்.